search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனபாலை முதலமைச்சராக்க பட்டியலின எம்.எல்.ஏ.க்களே எதிர்ப்பு தெரிவித்தனர்- திவாகரன்
    X

    தனபாலை முதலமைச்சராக்க பட்டியலின எம்.எல்.ஏ.க்களே எதிர்ப்பு தெரிவித்தனர்- திவாகரன்

    • எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை.
    • எடப்பாடி பழனிச்சாமி உள்ளடக்கிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு தான் நடக்கும்.

    விராலிமலை:

    சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னதாக அவர் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு சபாநாயகராக இருந்த தனபாலை முதலமைச்சராக ஆக்கலாம் என்று நான் சசிகலாவிடம் கூறி முன்மொழிந்தேன். அப்போது அதற்கு திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர்

    ஆனால் அப்போது 35 பட்டியலின எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் அவர்கள் அதற்கு ஒத்துவரவில்லை. எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு விரைவில் நடைபெறும்.

    2026 தேர்தலுக்குள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு நடந்து விடும்.

    மத்திய அரசோடு தி.மு.க. 24 மணி நேரமும் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் நிதிகள் வருவது இல்லை. இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான்.

    மோதல் போக்கை கைவிட்டு நிர்வாக ரீதியாக சமூகமான முறையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    மத்திய அரசுக்கு மாநில அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியால் என்னைப் போன்ற கல்வியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அவர் என்னை விட சீனியர்.

    எடப்பாடி பழனிச்சாமி உள்ளடக்கிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு தான் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×