search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்செந்தூர் கோவில் பணிகள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
    X

    திருச்செந்தூர் கோவில் பணிகள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு ரூ.79 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • வரிசைமுறை பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து விரிவான ஆய்வு.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 28.09.2022 அன்று திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    அதேபோல ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு ரூ.30 கோடி மதிப்பீட்டிலும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு ரூ.79 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அமைச்சர் சேகர்பாபு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் ஆகிய கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள், ஒருங்கிணைந்த பெருந்திட்டப் பணிகள், பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வரிசைமுறை பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி.ஹரிப்ரியா, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், வி.செந்தில்முருகன், ந.ராமதாஸ், இணை ஆணையர் பொ.ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×