என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதை பொருட்களுக்கு தடை- போலீஸ் கமிஷனர்
- நீச்சல் குளத்தின் அருகே மேடை அமைக்க கூடாது.
- புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சீல் வைக்கப்படும்.
சென்னை:
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் இன்று ஓட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கூட்டம் முடிந்த பின்னர் தனியார் ஓட்டல் நிர்வாகி சுரேஷ் கூறியதாவது:-
புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதை பொருட்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொண்டாட்டங்களுக்கு வருபவர்கள் போதை பொருட்களை வைத்துள்ளார்களா என்று பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
ஆம்புலன்ஸ் வாகனங்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தின் அருகே மேடை அமைக்க கூடாது. 80 சதவீதம் அளவுக்கே நபர்களை அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக போலீசாரை அழைக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளையும் போலீசார் வழங்கினர்.
1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சீல் வைக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






