என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மாயவிதையை விதைக்க ஓ.பி.எஸ். தொடர்ந்து முயற்சி: தகுதி, திறமை இருந்தால் மோதி பார்க்கட்டும்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
- நம் இயக்கத்தை தி.மு.க.விடம் அடகு வைக்கவும், தனித் தன்மையை சீர்குலைக்கவும் முயன்ற பன்னீர்செல்வத்திடமிருந்து கழகத்தை மீட்டெடுத்து பெருமையைக் காத்தவர் எடப்பாடியார்.
- அ.தி.மு.க.வின் மீது அசைக்க முடியாத பற்றுகொண்ட 44 ஆயிரம் பேர் வாக்களித்ததுதான் உண்மையான வெற்றி.
சென்னை:
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புரட்சித் தலைவி அம்மாவின் மறைவுக்குப் பின், ஓ. பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் முட்டாளின் மூளையில் முன்னூறு பூ மலரும் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளன.
அவரை உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை அழிக்க சதித்திட்டமிட்டு, நம் பரம்பரை எதிரி தீயசக்தி தி.மு.க.-வோடு சேர்ந்து செயல்படும் துரோகி ஓ. பன்னீர்செல்வம். நம் இயக்கத்தைக் காக்கப் போராடி வரும் அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை ஓ. பன்னீர்செல்வம் தனது அறிக்கையில், விரக்தியின் உச்சியில் உளறியுள்ளார்.
நம் இயக்கத்தை தி.மு.க.விடம் அடகு வைக்கவும், தனித் தன்மையை சீர்குலைக்கவும் முயன்ற ஜீரோ பன்னீர்செல்வத்திடமிருந்து, நம் கழகத்தை மீட்டெடுத்து கட்டிக் காப்பாற்றி, கழகத்தின் பெருமையைக் காத்தவர் எடப்பாடியார்.
சட்டமன்றத்தில், அம்மாவின் அரசை எதிர்த்து வாக்களித்து துரோகம் செய்தபின், பதவி சுகத்திற்காக தேடி வந்த ஓ.பன்னீர்செல்வத்தை அரவணைத்து துணை முதலமைச்சராக மட்டுமல்ல, கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கியவர் எடப்பாடியார். உடனிருந்தே தொல்லை கொடுக்கும் வியாதிபோல், பல்வேறு துரோகச் செயல்களில் ஈடுபட்டதையும் பொறுத்துக் கொண்டவர் எடப்பாடியார்.
இந்த சுயநலவாதி திருந்துவார் என்று காத்திருந்த நிலையில், தன் மகனை, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்திக்க வைத்து, பாராட்டுப் பத்திரம் படிக்க வைத்து, சரணாகதி அடைந்ததை அறிந்த பின்புதான், புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டிக்காக்கும் நடவடிக்கைகளில் எடப்பாடியார் ஈடுபட்டார்.
தி.மு.க. எதிர்ப்பு என்ற நமது தொப்புள் கொடி கொள்கையை சீர்குலைக்க, இந்த சுயநலவாதி முயன்றதை உணர்ந்ததால்தான் ஒட்டுமொத்த இயக்கமும் கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் பின்னால் அணிவகுத்து நின்றது.
வெறும் நான்கு பேருடன், வாயை வாடகைக்கு விடும் ஒருசிலரை மட்டுமே வைத்துக்கொண்டு, எடப்பாடியாரின் தனித் தன்மையை சீர்குலைக்க முயன்ற இவர், தன் நிலை அறியாமல், தன்னை மறந்து புத்தி தடுமாறி தாறுமாறாக உளறி வருகிறார்.
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தலில், ஆளும் கட்சி ரூ. 360 கோடியைக் கொட்டி, மக்களை பட்டியில் அடைத்து நம்மிடமிருந்து தட்டிப் பறித்த வெற்றியை, இந்த துரோகி கொண்டா டுவது வெட்கக்கேடு. நாம் நடத்திய புனித வேள்வியில், தர்மம் காக்க உண்மைத் தொண்டர்களின் துணையுடன் களமாடிய எடப்பாடி யாருக்கு, அ.தி.மு.க.வின் மீது அசைக்க முடியாத பற்றுகொண்ட 44 ஆயிரம் பேர் வாக்களித்ததுதான் உண்மையான வெற்றி.
இந்த இடைத் தேர்தலில் கழகத்திற்கு டெபாசிட் கூட கிடைக்கக்கூடாது என்ற தனது எண்ணத்தில் மண்விழுந்த ஆத்திரத்திலும், தன் அரசியல் வாழ்வு இப்படி சூனியமாகிபோய்விட்டதே என்ற ஆற்றாமையிலும் பித்துக்குளிபோல் உளறத் துவங்கி உள்ளார் பன்னீர்செல்வம்.
இதுவரை இவரைப்பற்றி தவறாக ஒரு வார்த்தைகூட எடப்பாடியார் சொன்னதில்லை. இவர் செய்த பல்வேறு துரோகங்களை பெரிதுபடுத்தாமல் இந்த இயக்கத்தை கட்டிக் காக்கும் தியாக வேள்வியில் ஈடுபட்டு வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் முறையாக ஒரு வேட்பாளரைக்கூட நிறுத்த முடியாத இந்த காகிதப் புலி, அவராலேயே குற்றம் சாட்டப்பட்ட சசிகலா வகையறாவையும் சேர்த்தால்தான் இயக்கம் வலுப்பெறும் என்ற மாய விதையை விதைக்க ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து முயன்று வருகிறார்.
இவருக்கும், இவரைச் சார்ந்தவர்களுக்கும் தகுதி, திறமை இருந்தால் தனிக் கடை தொடங்கி எடப்பாடி யாருடன் அரசியல் ரீதியாக மோதிப் பார்க்கட்டும். அதைவிடுத்து, தனி மனிதத் தாக்குதலில் ஈடுபட்டால் கைகட்டி வேடிக்கைப் பார்க்க உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் கோழைகள் அல்ல என்று எச்சரிக்கிறேன்.
புரட்சித் தலைவர் உருவாக்கிய அ.தி.மு.க. என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தை அழிக்க நினைக்கும் உங்களை புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி ஆகியோரது ஆன்மா என்றுமே மன்னிக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்