search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழவேற்காடு கடற்கரையில் பனைவிதைகள் நடவு ஒத்திகை: கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பாடு
    X

    பழவேற்காடு கடற்கரையில் பனைவிதைகள் நடவு ஒத்திகை: கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பாடு

    • ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான ஒத்திகை பழவேற்காடு கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் நடைபெற்றது.
    • எலைட் பள்ளியின் 100 மாணவர்களும் பள்ளியின் தாளாளர் ஜெபஸ்டின் மற்றும் இருபதுக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    சென்னை:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை இணைந்து ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான ஒத்திகை நேற்று (சனிக்கிழமை) மாலை பழவேற்காடு கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் நடைபெற்றது.

    அதில் தன்னார்வலர்கள் மற்றும் செங்குன்றம் பகுதியில் இயங்கி வரும் எலைட் பள்ளியின் 100 மாணவர்களும் பள்ளியின் தாளாளர் ஜெபஸ்டின் மற்றும் இருபதுக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    அப்போது ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு 9,300 பனை விதைகளை நடவு செய்தனர். இதனை செயல்படுத்திட எவ்வளவு நேரம் செலவாகிறது என்பதை அறிந்து கொள்ளவே இந்த ஒத்திகை நடைபெற்றது.

    மேலும் ஒரு பனை விதைக்கும் இன்னொரு பனை விதைக்கும் ஒரு மீட்டர் தூரம் இருக்க வேண்டும் பனை விதைகளை எப்படி குறுக்கும் நெடுக்குமாக நட வேண்டும் விதையை எந்த நிலையில் குழியில் வைக்க வேண்டும் போன்ற அனைத்து செய்முறை விளக்கங்களும் செய்து காட்டப்பட்டன.

    இதனை பின்பற்றியே, ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்ய திட்டமிடபட்டுள்ளது.

    ஒத்திகை நிகழ்ச்சியை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணனின் மகனும், பனை ஆர்வலருமான கார்த்திக் நாராயணன் தலைமை தாங்கி விதை நடவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கிரீன்நீடா அமைப்பினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜ வேலு, இணை ஒருங்கிணைப்பாளர் ரபிக் முகமது, திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன் மற்றும் பனை வாரிய அலுவலர்கள் குமரன், ஜெபராஜ் டேவிட், தன்னார்வலர் பொன்னேரி பாலகிருஷ்ணன், தங்கமுத்து, முனீஸ்வரன், முகப்பேர் ராஜ்குமார், மதுரவாயல் அலெக்ஸ் , ஆர்.கே நகர் ராஜேஷ், பழவேற்காடு சுரேஷ்குமார், மகளிர் ஆர்வலர்கள் ஆனந்தி, விஜயலட்சுமி, முருகேஸ்வரி,சிவசாந்தி, ராஜ புஷ்பம், சாந்தி, கவுசல்யா உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×