search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்று 2-வது நாளாக நடக்கிறது... 5 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இன்று 2-வது நாளாக நடக்கிறது... 5 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

    • ராமஜெயம் கொலை வழக்கில் கொலையில் இதுவரையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
    • இன்று சத்தியராஜ், செந்தில், கலைவாணன், ராஜ்குமார், சுரேந்தர் ஆகிய 5 பேரிடம் விசாரணை நடக்கிறது.

    சென்னை:

    திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலையில் இதுவரையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடந்து வருகிறது.

    சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் நேற்று கூலிப்படையை சேர்ந்த திண்டுக்கல் மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சீர்காழி சத்யா ஆகிய 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

    இன்று சத்தியராஜ், செந்தில், கலைவாணன், ராஜ்குமார், சுரேந்தர் ஆகிய 5 பேரிடம் விசாரணை நடக்கிறது. நாளை 3 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உண்மை கண்டறியும் பரிசோதனையின்போது அவர்கள் கூறும் தகவல் போலீசாரால் பதிவு செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்படுகிறது.

    Next Story
    ×