search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு பஸ்களில் 50 ஆயிரம் பேர் முன்பதிவு- இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது
    X

    அரசு பஸ்களில் 50 ஆயிரம் பேர் முன்பதிவு- இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது

    • கோடை விடுமுறை ஒரு புறமும் அரசு ஊழியர்களுக்கு மே தினத்தையொட்டி (திங்கட்கிழமை) நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
    • ஆம்னி பஸ்களில் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கிறார்கள்.

    சென்னை:

    அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாளை முதல் விடப்பட்டு உள்ளது. ஏற்கனவே தனியார் பள்ளி மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வை முடித்துவிட்டு கோடை விடுமுறையில் உள்ளனர்.

    அரசு பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களும் தேர்வு முடிவுக்காக காத்து இருக்கின்ற நிலையில் வெளியூர்களுக்கு பயணத்தை தொடங்கிள்ளனர்.

    கோடை விடுமுறை ஒரு புறமும் அரசு ஊழியர்களுக்கு மே தினத்தையொட்டி (திங்கட்கிழமை) நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. அதனால் வெளியூர் பயணம் செய்ய மக்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

    அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டதால் ஆம்னி பஸ்களில் கொள்ளை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பஸ்களில் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கிறார்கள்.

    இதனால் அரசு பஸ்களை நாடி பலரும் வருகிறார்கள். அரசு விரைவு பஸ்கள் மற்றும் பிற போக்குவரத்து அரசு பேருந்துகள் இந்த 4 நாட்களும் நிரம்பிவிட்டன. இன்று முதல் மே 1-ந் தேதி வரை 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து மட்டும் 25 ஆயிரம் பேர் வெளியூருக்கு பயணம் செய்ய முன்பதிவு செய்து உள்ளனர். வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பவும் ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்கின்றனர்.

    இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும். 2100 பஸ்களுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    மே தினத்தையொட்டி தொடர் அரசு விடுமுறை நாட்கள் வருவதால் அரசு பஸ்களில் முன்பதிவு பண்டிகை காலத்தில் இருப்பது போன்று பதிவாகி உள்ளது. 4 நாட்களுக்கு 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். பயணி கள் கூட்டம் இன்று மாலையில் இருந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் 4 நாட்களுக்கும் கூடுதலாக தலா 500 பஸ்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம்.

    அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, புதுவை ஆகிய போக்குவரத்து கழகங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது. ஆம்னி பஸ்களை விட கட்டணம் பல மடங்கு குறைவாக இருப்பதால் தற்போது அரசு பஸ்களில் மக்கள் அதிகளவில் பயணம் செய்ய ஆர்வம் காட்டு கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×