என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
விதிமுறைகளை மீறியதால் அரூரில் விதை விற்பனை நிலைய உரிமம் தற்காலிகமாக ரத்து விதை ஆய்வு அதிகாரி அறிக்கை
- காலாவதியான விதைகளை கடையில் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அது சட்டப்படி குற்றம்.
- விதைகள் போன்றவற்றை வாங்கும்போது தங்கள் பெயர், விற்பனையாளரின் கையொப்பம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரசீது பெற்றுச் செல்ல வேண்டும்.
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூரில் விதிமுறைகளை மீறி விதை விற்பனையில் ஈடுபட்ட தனியார் விதை விற்பனை நிலைய உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தாவது:-
விதை விற்பனையாளர்கள் விதிமுறைகளை தவறாமல் கடைப் பிடித்தும், விவசாயிகளுக்கு தரமும், உரிய முளைப்புத் திறனும் கொண்ட பருவத்துக்கு ஏற்ற விதைகளை விநியோகிக்க வேண்டும்.
விதை இருப்புப் பதிவேட்டில் விற்பனை செய்த விதைகளை தினமும் கழித்து இருப்பினை சரிபார்த்து முறையாக பராமரிக்க வேண்டும். விதை உரிமம் கடையில் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.
விதை விற்பனையின் போது பயிர், ரகத்தின் பெயர், குவியல் எண், காலாவதி தேதி, விலை, விவசாயி பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய, கடைக்காரரின் கையொப்பத்துடன் கூடிய ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
விதைகளை உர சிப்பங்கள், பூச்சி மருந்துகளின் அருகே வைக்கக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறுவோரின் உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
விதை விநியோகதாரர்கள் அனைத்து குவியல்களுக்கும் பணி விதை மாதிரி எடுத்து பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்டு தரத்தை உறுதிசெய்த பிறகே விற்பனையாளருக்கு அனுப்ப வேண்டும். அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். காலாவதியான விதைகளை கடையில் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அது சட்டப்படி குற்றம்.
எனவே, விதைகள் சட்டம் 1966, விதை விதிகள் 1968, விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின் கீழ் உள்ள விதிகளின்படி விதை விற்பனையாளர்கள் கவனத்துடனும், விவசாயிகளின் நலன் சார்ந்தும் விதை விற்பனையில் ஈடுபட வேண்டும்.
விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதைகள் பருவத்துக்கு ஏற்றவையா என்பதை அறிந்தும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் தங்கள் பகுதி வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி சந்தேகங்களை போக்கிக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விதைகள் போன்றவற்றை வாங்கும்போது தங்கள் பெயர், விற்பனையாளரின் கையொப்பம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரசீது பெற்றுச் செல்ல வேண்டும். தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாரத்தில் விதிகளை மீறி விதை விற்பனை செய்த தனியார் விதை விற்பனை நிலைய உரிமம் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்