search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    1 லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
    X

    1 லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

    • பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 35.8 லட்சமாக உயரும்.

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு விவரம் வருமாறு:

    விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கும், நலிவுற்ற பிரிவினருக்கும் தக்க சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய, பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

    இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் மே 2021 முதல் புதிதாக 5,76,725 பேர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவை தவிர பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான ஒரு லட்சம் பேர்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும். இதன் மூலம் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 35.8 லட்சமாக உயரும். சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக இம்மதிப்பீடுகளில் ரூ.5,346 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×