என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
போடி அருகே பிடிபட்ட இலங்கை ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைப்பு
BySuresh K Jangir9 April 2023 10:36 AM IST
- காகங்கள் மொத்தமாக சேர்ந்து விரட்டியதால் பயந்துபோன ஆந்தை அங்குள்ள காய்ந்து கிடந்த மரக்கட்டைகளில் தஞ்சம் புகுந்தது.
- ஆந்தை குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி வனப்பகுதிக்கு இலங்கை, அந்தமான் உள்ளிட்ட கடல் பகுதிகளில் வசிக்கும் பார்ன் இன ஆந்தைகள் இனப்பெருக்கத்திற்காக ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை வரும். இந்த ஆந்தைகளின் விரல் கடினமானதாகவும், விரைப்புடனும் இருக்கும். இந்த வகை ஆந்தை போடி பாரத ஸ்டேட் வங்கி அருகே வந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த காகங்கள் மொத்தமாக சேர்ந்து விரட்டியதால் பயந்துபோன ஆந்தை அங்குள்ள காய்ந்துகிடந்த மரக்கட்டைகளில் தஞ்சம்புகுந்தது.
இந்த ஆந்தை குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆந்தையை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Next Story
×