search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 46 சதவீதம் பேர் முகக்கவசம் அணிய விரும்புவதில்லை கருத்துக்கணிப்பில் தகவல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னையில் 46 சதவீதம் பேர் முகக்கவசம் அணிய விரும்புவதில்லை கருத்துக்கணிப்பில் தகவல்

    • முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு இருந்தும் முகக்கவசம் அணிவதை தவிர்க்கும் எண்ணம் இருக்கிறது.
    • முகக்கவசம் அணிபவர்களும் முறையாக அணிவதில்லை.

    சென்னை:

    போகவில்லை கொரோனா போட வேண்டும் முகக்கவசம். அவசியம் என்றாலும் முகக் கவசம் அணியாமல் நடமாடுபவர்களைத்தான் அதிகமாக பார்க்க முடிகிறது.

    எனவே முகக்கவசம் பற்றிய விழிப்புணர்வு, அதை அணியும் பழக்க வழக்கம் எப்படி இருக்கிறது என்பது பற்றி ஐ.சி.எம். ஆரும் சென்னை மாநகராட்சியும் இணைந்து ஒரு ஆய்வை நடத்தி இருக்கிறது.

    மொத்தம் 431 பேரிடம் கருத்து கேட்டுள்ளார்கள். அதில் 80 சதவீதம் பேர் குடிசை பகுதிகளில் வசிப்பவர்கள்.

    முகக்கவசம் கொரோனா வைரஸ் பரவல் குறைய உதவுகிறது என்பது தெரியுமா? என்ற கேள்விக்கு 86.7 சதவீதம் பேர் ஆமாம் என்று பதில் அளித்துள்ளார்கள். குறைக்க உதவுவாது என்று 8.6 சதவீதம் பேரும் அதைப்பற்றி எதுவும் தெரியாது என்று 4.7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். பொது போக்குவரத்தில் செல்லும் போது முகக்கவசம் தேவை என்று கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு 85.2 சதவீதம் பேர் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். விருப்பப்பட்டால் அணியலாம் என்று 10.9 சதவீதம் பேர் பதில் அளித்துள்ளார்கள். முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்துவதை 46.5 சதவீதம் பேர் விரும்புகிறார்கள். 47.5 சதவீதம் பேர் விரும்பவில்லை.

    46 சதவீதம் பேர் மாஸ்க் அணிவது பிடிக்கவில்லை என்றே தெரிவித்துள்ளர்கள். முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு இருந்தும் முகக்கவசம் அணிவதை தவிர்க்கும் எண்ணம் இருக்கிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறுகிறார்கள். முகக்கவசம் அணிந்து சென்றால் கொரோனா நோயாளி போல் மற்றவர்கள் பார்ப்பார்களே என்ற தயக்கம், மூச்சு விட சிரமம், மாஸ்க் விலை அதிகம் என்கிறார்கள்.

    முகக்கவசம் அணிபவர்களும் முறையாக அணிவதில்லை. முகக்கவசத்தை கழட்டிய பிறகு கைகளை கழுவி சுத்தப்படுத்துவதில்லை என்று தெரியவந்துள்ளது.

    Next Story
    ×