என் மலர்
தமிழ்நாடு
அந்தமானுக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது
- அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் விமான சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
- இன்று காலை முதல் சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது.
சென்னை:
சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் விமான சேவை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் விமான சேவை நிறுத்தப்பட்டது.
அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் அங்கு மோசமான வானிலை இருந்ததால் 4 நாட்களாக விமான சேவை நடைபெறவில்லை.
இந்த நிலையில் அங்கு பராமரிப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் விமான சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது.
இதேபோல அந்தமானில் இருந்தும் சென்னைக்கு விமானங்கள் வரத் தொடங்கின. தினமும் 10 முதல் 14 விமானங்கள் அந்தமானுக்கு சென்று வருகின்றன.
சுற்றுலா பயணிகள், அங்கு வசிப்பவர்கள், விமான சேவை நிறுத்தப்பட்டதால் மிகவும் கஷ்டப்பட்டனர். மீண்டும் சேவை தொடங்கியதை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகள் அந்தமானுக்கு பயணமானார்கள்.