என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
தனது வைர வரிகளால் காலம் கடந்தும் வாழ்பவர் கண்ணதாசன்- அண்ணாமலை புகழாரம்
ByMaalaimalar17 Oct 2024 2:10 PM IST (Updated: 17 Oct 2024 2:10 PM IST)
- 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், காப்பியங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என அவரது எழுத்துக்கள் புகழ்பெற்றவை.
- ஊடக இதழாசிரியர், தமிழக அரசவைக் கவிஞர், சாகித்ய அகாடமி விருது என, தமது திறமையால் அவர் அடைந்த உயரங்கள் பல.
சென்னை:
பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
எல்லாச் சூழலுக்கும் பொருந்தும்படியாக, ஆறுதலாக, உத்வேகமாக இருக்கும் தமது வைர வரிகளால், காலங்களைக் கடந்து வாழும் கவியரசர் கண்ணதாசன் நினைவு தினம் இன்று.
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் முதலான நூல்கள், அவரது ஆழ்ந்த இறைபக்தியை விளக்கும். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், காப்பியங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என அவரது எழுத்துக்கள் புகழ்பெற்றவை. ஊடக இதழாசிரியர், தமிழக அரசவைக் கவிஞர், சாகித்ய அகாடமி விருது என, தமது திறமையால் அவர் அடைந்த உயரங்கள் பல.
இறவாப் புகழ் பெற்ற கவியரசர் கண்ணதாசனுக்கு நினைவஞ்சலிகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×