என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கொடுங்கையூரில் அதிர்ச்சி சம்பவம்: 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் கைது
- கொடுங்கையூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்தார்.
- புகாருக்குள்ளான மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் அவன் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டான்.
சென்னை:
கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியும், எம்.கே.பி.நகர் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவனும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வந்தனர்.
பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளின் போது இருவரும் சந்தித்து பேசினர். அப்போது பிளஸ்-1 படித்து வந்த மாணவன், மாணவியை காதல் வலையில் வீழ்த்தினான். மாணவியை ஏமாற்றி தனியாக அழைத்துச் செல்வதை அவன் வழக்கமாக வைத்திருந்தான்.
இந்த நிலையில் மாணவனின் நண்பர் ஒருவர் தனியாக அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். பிளஸ்-2 படித்து வந்த போது அங்கு 2 முறை மாணவியை ஏமாற்றி அழைத்துச் செள்றுள்ளான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு முறையும், கடந்த பிப்ரவரி மாதம் ஒரு முறையும் மாணவன், மாணவியை அழைத்துச் சென்று அறையில் பேசிக்கொண்டு இருந்துள்ளான்.
அப்போது அந்த வீட்டில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு மாணவியை ஏமாற்றி அழைத்துச் சென்ற மாணவன் அங்கு வைத்து உல்லாசமாக இருந்துள்ளான்.
இதன் பின்னர் ஒன்றும் தெரியாதது போல பிளஸ்-2 படிப்பையும் முடித்து விட்டு மாணவன் கல்லூரியில் சேர்ந்து விட்டான். இந்த நிலையில் மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அவரது தாய் எழும்பூரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு மாணவியை அழைத்துச் சென்று பரிசோதித்தார். அப்போது பெண் டாக்டர் ஒருவர் மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினார். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சிறுமியிடம் விசாரணை நடத்திய போது தான் பிளஸ்-2 படித்த மாணவன் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதை கூறி கதறி அழுதார். இது பற்றி உடனடியாக கொடுங்கையூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்தார்.
இதன் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புகாருக்குள்ளான மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் அவன் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டான். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவியிடம் ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்