என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னையில் சில இடங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் தாமதம்
- சென்னையில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாளில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது.
- புதிய சிலிண்டர்கள் கிடைத்த பிறகு சிலிண்டரை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னையில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாளில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சென்னையில் சில இடங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிய சிலிண்டர்கள் உடனே வராததால் பொது மக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
திருவான்மியூர் பகுதியில் வழக்கமாக முன்பதிவு செய்த 3 நாட்களுக்குள் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு விடும். ஆனால் அங்கு முன்பதிவு செய்த 8 நாட்களுக்கு பிறகே சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. சில வாடிக்கையாளர்கள் கியாஸ் அலுவலகங்களுக்கே சென்று காலி சிலிண்டர்களை கொடுத்து புதிய சிலிண்டர் கேட்கிறார்கள்.
பல வாடிக்கையாளர்கள் 2 சிலிண்டர் வைத்திருந்தாலும் கடைசி நேரத்திலேயே முன்பதிவு செய்து சிலிண்டர் கிடைக்காமல் திணறுகிறார்கள். கொரோனா தொற்று ஊரடங்கின்போது கூட சிலிண்டர் தாமதமின்றி கிடைத்தது. தற்போது சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன ஆலையில் ஒரு சிலிண்டரின் அடிப்பகுதி வெடித்ததால் விபத்து ஏற்பட்டது. எனவே பழைய மற்றும் துருப்பிடித்த சிலிண்டர்கள் அகற்ற நிறுவனம் முடிவு செய்தது. பழைய சிலிண்டர்களை அகற்றிய நிலையில் அதற்கு பதிலாக புதிய சிலிண்டர்கள் போதுமான அளவில் வரவில்லை. இதன் காரணமாகவே கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
சென்னையில் தற்போது முன்பதிவு செய்து 5 நாட்களுக்கு பிறகும், மற்ற இடங்களில் 3 நாட்களுக்கு பிறகும் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. புதிய சிலிண்டர்கள் கிடைத்த பிறகு சிலிண்டரை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.