என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழுக்கு தி.மு.க. செய்யாததை பிரதமர் மோடி செய்கிறார்- குஷ்பு பேட்டி
- தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் தான் கல்வி புரட்சி நடந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் கூறி இருக்கிறார்.
- தமிழகத்தின் எல்லையை தாண்டி தமிழும் பேச மாட்டார்கள். தமிழின் பெருமை பற்றியும் சொல்ல மாட்டார்கள்.
சென்னை:
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் தான் கல்வி புரட்சி நடந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் கூறி இருக்கிறார். அப்படி கல்வி புரட்சி ஏற்பட்டு இருந்தால் முதலில் தி.மு.க.வினர் அனைவரும் நன்றாக படித்து இருப்பார்களே? ஊழல் செய்து இருக்க மாட்டார்களே! ஜெயிலுக்கு போக மாட்டார்களே.ஆனால் தி.மு.க. ஆட்சி காலங்கள் ஊழல் நிறைந்த காலங்களாகத்தானே இருக்கிறது.
நிதி அமைச்சரே 30 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததை குறிப்பிட்டுள்ளார். உண்மையாகவே கல்வி புரட்சி செய்து இருந்தால், மக்கள் நல அரசியலை செய்து இருந்தால் தி.மு.க.வும் தேசிய அளவில் வளர்ந்து இருக்கும். ஏன், மு.க.ஸ்டாலின் பிரதமராக கூட வந்திருப்பாரே. தமிழ்நாடு எங்கோ போயிருக்குமே.
திராவிட மாடல் என்பது ஊழல் மாடலாகத்தானே எல்லோருக்கும் தெரிகிறது. ஒரு கட்சி, ஆட்சியை மக்கள்தான் பாராட்ட வேண்டும். ஆனால் எங்கள் ஆட்சி சூப்பர் என்று தனக்கு தானே பாராட்டி கொள்வதை நிச்சயம் மக்கள் ரசிக்க மாட்டார்கள். கிண்டல்தான் செய்வார்கள்.
2 வருட தி.மு.க. ஆட்சியில் மக்கள் நொந்து போய் இருக்கிறார்கள். ஒரு மணி நேரம் மழை பெய்தால் மக்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பது அவர்களுக்குத்தானே தெரியும்.
தமிழ் தமிழ் என்று இத்தனை காலமும் மக்களை ஏமாற்றினார்கள். இப்போது அதையும் மக்கள் புரிந்து கொண்டார்கள். தமிழகத்தின் எல்லையை தாண்டி தமிழும் பேச மாட்டார்கள். தமிழின் பெருமை பற்றியும் சொல்ல மாட்டார்கள்.
ஆனால் பிரதமர் மோடி நாட்டில் பல மொழிகள் இருந்தும் தமிழின் தொன்மையை அறிந்து உலகம் முழுவதும் அதன் பெருமையை சுட்டிக் காட்டுகிறது. ஐ.நா.சபை வரை உலகில் எங்கு பேசினாலும் திருக்குறள், தமிழின் பெருமை, கலாச்சாரம் பற்றி பேச தவறவில்லை. இப்போது பிரான்சில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவி தமிழின் பெருைமயை அங்கு நிலைநாட்டி இருக்கிறார்.
தமிழுக்கு தி.மு.க.வால் செய்ய முடியாததை, செய்யாததை பிரதமர் மோடி செய்து வருகிறார். அதை பாராட்டக்கூட மனம் வரவில்லை. நல்லது செய்வதை அவர்கள் ஒப்புக் கொள்வதே கிடையாது. அப்படியிருக்கும்போது எப்படி பாராட்டுவார்கள்?
மனதார எதையும் செய்வதில்லை. மக்களை ஏமாற்றி குறுகிய வட்டத்துக்குள் வைத்திருந்த அவர்களின் சித்து வேலைகள் தோலுரிந்து வருகிறது. உண்மையாகவே நாட்டுக்கு யார் உழைக்கிறார்கள் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து விட்டார்கள். இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்