என் மலர்
தமிழ்நாடு
வெள்ளம் வடிந்தாலும் பெட்ரோல் நிலையங்கள் செயல்படவில்லை
- மின்தடை ஏற்பட்டதாலும் வெள்ளம் சூழ்ந்ததாலும் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் பங்க்கள் செயல்படவில்லை.
- ஒரு சில பங்க்கள் மட்டுமே செயல்பட்டன.
சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான பெட்ரோல் பங்க்களில் வெள்ள நீர் புகுந்தது. தரைக்கு அடியில் இருந்த டேங்கில் வெள்ள நீர் புகுந்து கலந்தது. மின்தடை ஏற்பட்டதாலும் வெள்ளம் சூழ்ந்ததாலும் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் பங்க்கள் செயல்படவில்லை. ஒரு சில பங்க்கள் மட்டுமே செயல்பட்டன.
இந்த நிலையில் தண்ணீர் வடிந்த பிறகும் நிலையங்கள் செயல்படவில்லை. பெட்ரோல்-டீசலுடன் மழைநீர் கலந்ததால் அதனை தனியாக பிரித்த பிறகு தான் விற்பனை செய்ய வேண்டும். அந்த பணியை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோலுடன் கலந்த தண்ணீரை பிரிப்பது கடினம். ஆனால் டீசலுடன் கலந்த தண்ணீரை எளிதாக பிரித்து விடலாம். எனவே தண்ணீர் கலந்த எண்ணையை பிரித்து எடுத்த பிறகு தான் விற்பனை செய்ய முடியும் என்பதால் இன்னும் முழு அளவில் பெட்ரோல் பங்க்கள் செயல்படவில்லை என உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.