என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தி.மு.க. எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது
- பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.
- கைதான பா.ஜ.க.வினரை தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தருமபுரி:
தருமபுரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. டாக்டர் செந்தில்குமார் பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற முடியும். தென் மாநிலங்களில் வெற்றி பெற முடியாது. இந்தி பேசும் மாநிலங்களை கோமூத்ரா மாநிலங்கள் என குறிப்பிட்டார். இதனை கண்டித்து தமிழகத்தில் பா.ஜ.க.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் எந்தவித முன்அறிவிப்பின்றி திடீரென்று தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கூடாது என்று பா.ஜ.க.வினரை தடுத்து நிறுத்தினர். ஆனாலும், அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.
கைதான பா.ஜ.க.வினரை தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.