என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.1 கோடியே 86 லட்சம் பிடிபட்டது
- வேன் ஒன்றை மறித்து பறக்கும் படையினர் சோதனை மேற்கெண்டனர்.
- பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சென்னை:
சென்னையில் பறக்கும் படை சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக 24 மணி நேரமும் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ராஜா அண்ணாமலைபுரம் 3-வது குறுக்கு தெருவில் வேன் ஒன்றை மறித்து பறக்கும் படையினர் சோதனை மேற்கெண்டனர்.
இதில் ரூ.1 கோடியே 81 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் ஏ.டி.எம். மையத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Next Story






