search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இஞ்சி.
    X
    இஞ்சி.

    வரத்து குறைவால் புதிய உச்சம்: இஞ்சி விலை கிலோ ரூ.200-க்கு விற்பனை

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக இஞ்சி வரத்து குறைந்து விட்டது. இதனால் விலை அதிகரித்து உள்ளது.
    • இஞ்சிக்கு போதிய விலை கிடைக்காததால் விரக்தி அடைந்த பெரும்பாலான விவசாயிகள் இஞ்சி உற்பத்தி செய்வதையே நிறுத்திவிட்டனர்.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து அதிக அளவு இஞ்சி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று இஞ்சி வரத்து மேலும் குறைந்ததால் அதன் விலை இன்று புதிய உச்சம் தொட்டது.

    ஒரு கிலோ இஞ்சி மொத்த விற்பனை கடைகளில் ரூ.200-க்கு விற்கப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.240வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து இஞ்சி வியாபாரி ஒருவர் கூறும்போது, 'கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக இஞ்சி வரத்து குறைந்து விட்டது. இதனால் விலை அதிகரித்து உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்ட இஞ்சிக்கு போதிய விலை கிடைக்காததால் விரக்தி அடைந்த பெரும்பாலான விவசாயிகள் இஞ்சி உற்பத்தி செய்வதையே நிறுத்திவிட்டனர். இதனால் இஞ்சிக்கு தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு வரும் நாட்களிலும் தொடர்ந்து நீடிக்கும்' என்றார்.

    இதேபோல் வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100-க்கு விற்பனை ஆனது. சில்லரை கடைகளில் ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×