search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரே நாளில் ரூ.400 அதிகரிப்பு- தங்கம் விலை சவரன் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியது
    X

    ஒரே நாளில் ரூ.400 அதிகரிப்பு- தங்கம் விலை சவரன் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியது

    • கடந்த 16-ந்தேதி 1 சவரன் தங்கம் ரூ.40,360-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.40,448 ஆக அதிகரித்தது.
    • நேற்று முன்தினம் ரூ.40,560 ஆக உயர்ந்தது. நேற்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.40,520-க்கு விற்கப்பட்டது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. தங்கம் கடந்த ஏப்ரல் மாதம் 1 பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன்பிறகு தங்கம் விலை குறையத் தொடங்கி ரூ.37 ஆயிரம் முதல் ரூ.39 ஆயிரம் வரை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது. கடந்த 7 மாதங்களாகவே இதே நிலை நீடித்தது.

    இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை திடீரென்று உயர்ந்தது. கடந்த 2-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு 2 வாரங்கள் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 16-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.40,360-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.40,448 ஆக அதிகரித்தது. நேற்று முன் தினம் ரூ.40,560 ஆக உயர்ந்தது. நேற்று பவுனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.40,520-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை திடீரென்று பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.41 ஆயிரத்தை நெருங்கியது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.40,920-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5065-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.5115-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்து உள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.2.20அதிகரித்து ரூ.74.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74,700-க்கு விற்பனையாகிறது.

    Next Story
    ×