search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு பள்ளி மாணவிகளின் திறமையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த கலை நிகழ்ச்சி
    X

    அரசு பள்ளி மாணவிகளின் திறமையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த கலை நிகழ்ச்சி

    • மாணவர்களிள் மொழித்திறன், ஓவியம், நடனம், நாட்டியம், இசை, வாய்ப்பாட்டு இசை உள்ளிட்ட 82 வகையான கலைதிறன் போட்டிகள் நடத்தப்படுகிறது.
    • பள்ளிகள் அளவில் இந்த போட்டி கடந்த 23-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி நடந்து முடிந்துள்ளது.

    சென்னை:

    அரசு பள்ளி மாணவர்களின் கலை, பண்பாடு திறனை வெளிப்படுத்தும் வகையில் கலை திருவிழா என்ற பெயரில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இந்த போட்டி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

    மாணவர்களிள் மொழித்திறன், ஓவியம், நடனம், நாட்டியம், இசை, வாய்ப்பாட்டு இசை உள்ளிட்ட 82 வகையான கலைதிறன் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    பள்ளிகள் அளவில் இந்த போட்டி கடந்த 23-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து ஒன்றிய அளவில் நாளை (சனிக்கிழமை) வரையும் மாவட்ட அளவில் 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையும் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வகையான போட்டியிலும் மாணவ-மாணவிகள் ஊக்குவிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    3 நிலையில் நடத்தப்படுகின்ற போட்டியில் பங்கேற்று மாநில அளவில் தேர்வாகி வருகிற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்படுகின்றன. 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு இப்போட்டி நடத்தப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் உள்ள 13,210 அரசு பள்ளிகளில் கலை திருவிழா நடைபெறுகிறது. மாவட்ட அளவில் வெற்றி பெறுகிற 20 மாணவர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை மாவட்ட கல்வி அதிகாரி மார்ஸ் கூறும்போது, அரசு பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திருவிழா நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று வருகின்றனர்.

    இது போன்ற போட்டிகள் நடப்பது அரசு பள்ளி குழந்தைகளின் திறனை மேம்படுத்தி கொள்ள ஒரு வாய்ப்பாகும். நாட்டுப்புற இசைக்கருவிகள், தமிழர்களின் கலை, பண்பாட்டினை அறிந்து கொள்ள முடிகிறது.

    சென்னைகளில் 30 பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பங்கேற்று உள்ளனர் என்றார்.

    கலை திருவிழா போட்டியில் 17 லட்சம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கிறார்கள். எந்தெந்த போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர் என்ற விவரத்தை கேட்டறிந்து நடத்தப்படுகிறது.

    அரசு பள்ளிகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் உற்சாகம் அடைந்து உள்ளனர். பள்ளி வளாகங்கள் திருவிழா போல காட்சி அளிக்கிறது.

    மாநில அளவில் தேர்வு பெறும் 500 மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    Next Story
    ×