என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சர்வதேச காபி தினம் இன்று... சூடா... ஒரு காபி சாப்பிடலாமா?
- மன அழுத்தம், மனச்சோர்வு, நடுக்குவாத நோய் உள்ளிட்டவை வராமல் தடுக்கும் தன்மை காபிக்கு உள்ளது.
- கல்லீரல், புற்றுநோய் மற்றும் இதர புற்று நோய்களை தடுக்கும் திறனும் காபிக்கு உள்ளது.
காலையில் எழுந்தவுடன் சூடா... ஒரு காபியை குடித்தால்தான் அன்றைய பொழுதே சுறுசுறுப்பாக இருக்கும் என்பர் பலர். அந்த அளவுக்கு காபி குடிக்கும் பழக்கம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையுமே ஆட்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
காலையில் எழுந்து பல் துலக்கிவிட்டு காபியை ருசிப்பவர்கள் ஒரு ரகம். காபி கோப்பையை கையில் பிடித்தபடியே பேப்பர் படிக்கும் பழக்கத்துக்கு பலர் அடிமையாகி இருப்பார்கள்.
இன்னும் சிலரோ, காபி கிளாசுடன் ஹாயாக சேரில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே ருசிப்பவர்களும் உண்டு. மேலும் சிலரோ, வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு காபி குடிக்க விரும்புவார்கள்.
இப்படி காபியை ரசித்து... ருசித்து குடிப்பவர்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
காபி குடிப்பதால் நன்மையா? தீமையா? என்கிற விவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் நல்லதும் இருக்கு... கெட்டதும் இருக்கு என்கிறார்கள் டாக்டர்கள்.
சர்வதேச காபி தினமான இன்று ஒரு நாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம் என்பது பற்றியும், காபியின் நன்மை தீமைகள் பற்றியும் பார்ப்போம்...
100 மில்லி கிராம் அளவிலான காபியை ஒரு நாளைக்கு 2 அல்லது 4 முறை குடிக்கலாம் என்கிறார்கள் டாக்டர்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்.
அது எந்த பானத்துக்கு பொருந்துகிறதோ இல்லையோ காபிக்கு நிச்சயம் பொருந்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
காபிக்கு அடிமையானவர்களே அதிக அளவில் காபியை பருகுவதாக கூறும் டாக்டர்கள், ஒருவர் ஒரு நாளைக்கு 4 முறைக்கு மேல் காபி குடிக்கிறார் என்றால் அவர் காபிக்கு அடிமையானவராகவே இருப்பார்.
அப்படி அதிக அளவில் காபியை குடிப்பவர்கள் அஜீரண கோளாறு, வயிற்றுப்போக்கு, இரைப்பை பாதிப்பு உள்ளிட்டவைகளால் அவதிப்பட நேரிடும் என்று அறிவுரை கூறும் டாக்டர்கள், காபியை அளவோடு பருகினால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியலிடுகிறார்கள்.
மன அழுத்தம், மனச்சோர்வு, நடுக்குவாத நோய் உள்ளிட்டவை வராமல் தடுக்கும் தன்மை காபிக்கு உள்ளது. கல்லீரல், புற்றுநோய் மற்றும் இதர புற்று நோய்களை தடுக்கும் திறனும் காபிக்கு உள்ளது.
இதனால் அளவோடு பருகினால் காபியும் ஒரு அரு மருந்துதான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி குடிப்பதைவிட சாப்பிட்ட பிறகு சிறிது இடைவெளியில் காபி குடிப்பதே நல்லது என்றும் கூறுகிறார்கள்.
இரவில் காபி குடிப்பதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும் என்று கூறும் டாக்டர்கள் காபிக்கு அடிமையாகாமல் இருக்கும் வரை பிரச்சனை இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.
எனவே அளவான காபி நமது உடலுக்கு எப்போதும் ஆரோக்கியமே... வாங்க... சூடா ஒரு காபி சாப்பிடலாம்...
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்