என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழ் திரையுலகம் சார்பில் டிசம்பர் 24-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல் பங்கேற்கிறார்கள்
- கலைஞர் வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர்.
- மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
சென்னை:
தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி பிரமாண்ட விழா சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற டிசம்பர் மாதம் 24-ந்தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திர பிரகாஷ், கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.கே.செல்வமணி, கே.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், கலைஞர் ஆற்றிய மகத்தான சாதனைகளை அவரது நூற்றாண்டில் கலைஞர் 100 எனும் மிக பிரம்மாண்டமான விழாவாக அடுத்த மாதம் 24-ந்தேதி (ஞாயிறு) அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அகில இந்திய அளவில் தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மலையாளம், இந்தி, மராத்தி, ஒரியா, குஜராத்தி என பல மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க உள்ளோம்.
கலைஞர் வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த மாபெரும் விழாவில் முதல்கட்டமாக கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இந்த விழாவில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், விஜய், அஜித், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குறைந்தபட்சம் 35,000 பேர் இந்த விழாவினை அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது.
இந்த மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
நடனம், நாடகம், இசைக்கச்சேரி, ஒலி, ஒளி காட்சிகள், டிரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவாக்கி வருகிறோம்.
இந்த விழாவினை திரை நட்சத்திரங்களும், திரைக்கலைஞர்களும் பங்கெடுத்து சிறப்பிக்க இருப்பதால் அடுத்த மாதம் (டிசம்பர்) 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரை உலக வேலைகள் எதுவும் நடைபெறாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்