என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கடல் சீற்றத்தால் ராட்சத அலைகள்: பட்டினப்பாக்கத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
- பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் கடற்கரை பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது.
- திருவொற்றியூரில் காசிமேடு கடற்கரை பகுதிகளிலும் ராட்சத அலையுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது.
சென்னை:
மாண்டஸ் புயலால் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் ராட்சத அலைகள் பல அடி உயரத்துக்கு எழும்பி வருகின்றன. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் மெரினா பட்டினப்பாக்கம் பகுதியில் இன்று காலையில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடற்கரை மணல் பகுதியை தாண்டி வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் அவதிக்குள்ளானார்கள்.
பட்டினப்பாக்கத்தில் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சிலவற்றையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது. இந்த படகுகளை மீனவர்கள் போராடி கரைக்கு கொண்டு வந்தனர்.
பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் கடற்கரை பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதேபோல திருவொற்றியூரில் காசிமேடு கடற்கரை பகுதிகளிலும் ராட்சத அலையுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கடற்கரை பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.