என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்
- கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
- 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சிறிது நேரம் ஓய்வதும் மீண்டும் கொட்டி தீர்ப்பதுமாக தொடர்கிறது.
மழைநீர் வடிகால்வாய் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்த பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை. ஓரளவு தண்ணீர் தேங்கினாலும் மழை ஓயும்போது வடிந்து விடுகிறது.
ஆனால், உட்புற சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மோட்டார்கள் மூலம் அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், செங்குன்றம், பூந்தமல்லி, மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. சிறு சிறு கால்வாய்களில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் அந்த தண்ணீர் சாலைகளை சூழ்ந்தது.
சென்னையை பொறுத்தவரை 32 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பர் 1ம் தேதியன்று அதிகமழை பெய்துள்ளது. அதாவது நுங்கம்பாக்கத்தில் ஒரே நாளில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு இதே நாளில் 13 செ.மீட்டரும், 1964-ம் ஆண்டு 11 செ.மீட்டரும் மழை பெய்து இருக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள வானிலை முன்னறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்கள் வருமாறு:-
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று 2-வது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று கூறியதாவது:-
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வி, தென்காசி உள்பட 19 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக் கால் குதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். 4, 5ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடை இடையே மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை பெரம்பூர், கலெக்டர் அலுவலகம், ஆவடியில் தலா 17 செ.மீ. மழை பெய்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் காட்டு குப்பம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி 16 செ.மீ., செங்குன்றம், கும்மிடிப்பூண்டி தலா 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னை சோழிங்க நல்லூர், எம்.ஜி.ஆர். நகர், அம்பத்தூர், நுங்கம்பாக்கம், அயனாவரம், வில்லிவாக்கம் மற்றும் செய்யூர் ஆகிய இடங்களில் தலா 13 செ.மீ. மழை பெய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்