என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
8 புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு பரிசீலனை- அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
- கோவில்பட்டி, பழனி, பொள்ளாச்சி உள்பட 8 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டியிருந்தால் நிதி நிலைமைக்கு ஏற்ப முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.
சென்னை:
சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், ஆரணியை தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா? எனவும், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சேவூர் ராமச்சந்திரன், கோவி செழியன் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், வருவாய்த்துறை அரசாணை எண்.279-ன் படி ஒரு மாவட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட ரீதியான தகுதிகளை பூர்த்தி செய்யாததால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க முடியாது எனவும், கோவில்பட்டி, பழனி, பொள்ளாச்சி உள்பட 8 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டியிருந்தால் நிதி நிலைமைக்கு ஏற்ப முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.