என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
குடவாசல் தொகுதி அருகில் கல்லூரி கட்டிடம் கட்டப்படும்- அமைச்சர் தகவல்
- குடவாசல் பகுதியில் தயாராக உள்ள இடத்தை கொடுக்க பகுதி மக்கள் தயாராக உள்ளனர்.
- குடவாசல் தொகுதிக்கு அருகிலேயே கல்லூரி கட்டிடம் நிச்சயம் கட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.
சென்னை:
சட்டசபையில் இன்று நேரமில்லா நேரத்தில், குடவாசல் தொகுதியில் கல்லூரி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அவர் பேசுகையில், 'குடவாசல் தொகுதியில் 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரி கட்ட நடவடிக்கை மேற் கொண்டதாகவும், ஆனால் நீதிமன்ற வழக்கால் கட்ட முடியாமல் போய்விட்டது.
குடவாசல் பகுதியில் தயாராக உள்ள இடத்தை கொடுக்க பகுதி மக்கள் தயாராக உள்ளனர். குடவாசலிலேயே அரசு கலைக்கல்லூரி இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், குடவாசல் தொகுதிக்கு அருகிலேயே கல்லூரி கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை குடவாசலில் இடம் கிடைக்காததால் அருகில் இருக்கக்கூடிய இடத்தில் கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
10 ஆண்டுகளாக என்ன செய்திருந்தீர்கள். குடவாசல் தொகுதிக்கு அருகிலேயே கல்லூரி கட்டிடம் நிச்சயம் கட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.