என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக கலெக்டர்களுடன் ஆலோசனை
- ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
- சிறந்த கலெக்டர்களை தேர்வு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 10-வது மாடி கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருட்கள் ஒழிப்பு, அரசு திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதில் உள்ள சுணக்கத்தை போக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். வனத்துறை அதிகாரிகள், கலெக்டர்கள் அடங்கிய கூட்டமும் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய கூட்டு கூட்டமும் நேற்று நடத்தப்பட்டது.
இந்த மாநாடு 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது. இன்றைய மாநாட்டில் மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இன்று மாலை வரை இந்த மாநாட்டில் சிறந்த கலெக்டர்களை தேர்வு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.