என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
எதிர்க்கட்சி துணைத்தலைவராக என்னை அங்கீகாரம் செய்ததை பாசிட்டிவ் ஆக பார்க்கிறேன்- ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார்
- அ.தி.மு.க. இரு பெரும் தலைவர்கள் எளிய தொண்டனும் தலைவராக வேண்டும் என்ற விதியை வைத்திருந்தனர்.
- அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறோம்.
சென்னை:
சட்ட சபை கூட்டத்தில் இன்று பங்கேற்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சட்ட சபை கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. சட்ட விதிகளை திருத்தியதை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. ஜனநாயக கடமையாற்ற நான் சட்டமன்றத்திற்கு வந்தேன் சட்டமன்ற இருக்கைகள் மாற்றப் படாமல் உள்ளது குறித்து கடிதம் எழுதியவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அலுவல் ஆய்வுக்குழுவில் சபாநாயகர் எடுக்கும் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன்.
சட்ட சபையில் எதிர்க் கட்சி துணைத் தலைவராக என்னை அங்கீகாரம் செய்துள்ளதை பாசிட்டிவ் ஆக பார்க்கிறேன். அ.தி.மு.க. இரு பெரும் தலைவர்கள் எளிய தொண்டனும் தலைவராக வேண்டும் என்ற விதியை வைத்திருந்தனர்.
இந்த விதியை யாரும் மாற்ற முடியாது. ஆனால் தற்போது விதிகள் மாற்றப் பட்டுள்ளன. தலைமை பதவிக்கு வர 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும். 5 ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இது 1.5 கோடி தொண்டர்கள் மனதிலும் நீங்காத வடுவாக உள்ளது. இந்த மாற்றங்களை செய்தவர்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.
பேரவை தலைவர் அறிவிப்பின் அடிப்படையில் இன்றைய பேரவை கூட்டத்தில், பங்கேற்று உள்ளேன். அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறோம்.
அ.தி.மு.க. தொண்டர்கள் இயக்கம். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு16 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை ஜெயலலிதா நடத்தினார். இரு தலைவர்கள் அ.தி.மு.க.வுக்கு செய்த தியாகம், அடிப்படை தொண்டர்கள் ரத்தம் சிந்தி உழைத்தது இந்த இயக்கம்.
எம்.ஜி.ஆர். உருவாக்கி ஜெயலலிதா காப்பாற்றிய அ.தி.மு.க. சட்ட விதியை மாசு படாமல் காப்பாற்றும் நிலையில் உள்ளோம். அதற்கு அச்சுறுத்தல் வந்தாலும் கட்டி காப்பாற்றும் நிலையில் தான் நாங்கள் உள்ளோம். அ.தி.மு.க. சட்ட விதி அபாயகரமான சூழலாகும். இது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எண்ணத்திற்கு மாறுபட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்