என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலை மீது 'பெயிண்ட்' ஊற்றிய மர்மகும்பல்
- வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ராயபுரம் பகுதி அ.தி.மு.க. செயலாளர் அரசு புகார் செய்தார்.
- எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றிய மர்மகும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம்:
வண்ணாரப்பேட்டை, காலிங்கராயன் முதல் தெருவில் உள்ள அண்ணா திருமண மண்டபம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது. இந்த சிலை கடந்த 1994-ம் ஆண்டு திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்மகும்பல் எம்.ஜி.ஆர். சிலையின் முகத்தில் சிவப்பு நிற பெயிண்ட்டை ஊற்றி தப்பி சென்று விட்டனர். இன்று அதிகாலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் எம்.ஜி.ஆர்.சிலை மீது பெயிண்ட் ஊற்றப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் அ.தி.மு.க. பிரமுகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ராயபுரம் பகுதி அ.தி.மு.க. செயலாளர் அரசு புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர்.சிலை துணியால் மூடப்பட்டது. இச்சம்பவத் தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றிய மர்மகும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.