என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திருப்பூர் அருகே சாய ஆலைக்கு எதிராக வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்
- சாய ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- குன்னாங்கல்பாளையத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல் பாளையத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பல சாய தொழிற்சாலைகள் உள்ளது.
இந்தநிலையில் புதிதாக சாய தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே முதலமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு சாய ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக அந்தப் பகுதிமக்கள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் அதிகாரிகளிடம் மனு கொடுப்பது, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துவது, சாயத்தொழிற்சாலை அமைப்பதை நிறுத்தும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று குன்னாங்கல்பாளையத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.