என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முட்டுக்காடு பகுதியில் ரூ.487 கோடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்- தமிழக அரசு டெண்டர் கோரியது
    X

    முட்டுக்காடு பகுதியில் ரூ.487 கோடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்- தமிழக அரசு டெண்டர் கோரியது

    • ரூ.10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • 2025 இறுதி அல்லது 2026 தொடக்கத்தில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

    5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், ரூ.102 கோடியிலும், 10 ஆயிரம் பேர்கள் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம் ரூ.172 கோடியிலும், கூட்ட அரங்குகள் அரங்கம் ஆகிய வசதிகள் ரூ.106 கோடியிலும் அமைய உள்ளது.

    திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், ரூ.10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் வெளிப்புற பணிகளான சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, நுழைவு வாயில் உள்ளிட்டவைகள் ஆகிய பணிகள் ரூ.105 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    2025 இறுதி அல்லது 2026 தொடக்கத்தில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

    Next Story
    ×