என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள்
- அக்டோபர் 2-ந்தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 15 ஆயிரத்து 187 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
- பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில், பெயரை சேர்ப்பதற்காக படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம்.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக வரைவுப் பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றன.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்களிடமும், தேர்தல் துறையின் இணைய தளத்தின் வாயிலாகவும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அக்டோபர் 2-ந்தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 15 ஆயிரத்து 187 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கம் செய்வதற்காக 1,914 படிவங்களும், ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்ளேயே முகவரியை மாற்றுவதற்காக 19 ஆயிரத்து 36 படிவங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 36 ஆயிரத்து 142 விண்ணப்பங்கள் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடமும், தேர்தல் துறையின் இணைய தளம் மூலமும் விண்ணப்பங்களை அளித்தாலும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் 31 அமைவிடங்களில் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளுக்குச்சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்த்து வருகிறார்கள்.
பெயர்கள் விடுபட்ட வாக்காளர்கள் உரிய விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.
பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில், பெயரை சேர்ப்பதற்காக படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம். இதற்கான படிவங்கள் சிறப்பு முகாம்களிலேயே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்