என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சாராய வியாபாரிகளிடம் தொடர்பில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு: போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
- கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
- காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் போலீசார் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
கள்ளக்குறிச்சி உட்கோட்டம் கரியாலுர் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ராமலிங்கம்.இவர் தற்போது நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணி புரிந்து வருகிறார்.
இவர் கரியாலூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போது சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பில் இருந்து வந்த காரணத்தினால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா மற்றும் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் தொடர்பில் இருந்து, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் போலீசார் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.