என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாமில் 2 லட்சம் பேருக்கு பரிசோதனை
- நடமாடும் மருத்துவ குழுக்கள் உள்பட 1558 முகாம்கள் நடத்தப்பட்டன.
- மக்கள் தேவையில்லாமல் பதற்றம் அடைய அவசியமில்லை.
சென்னை:
நாடுமுழுவதும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்தார்.
அதன்படி சென்னையில் 200 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடந்தது. இந்த முகாம்கள் மூலம் பயன்அடைந்த பயனாளிகள் விபரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நடமாடும் மருத்துவ குழுக்கள் உள்பட 1558 முகாம்கள் நடத்தப்பட்டன. மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவ குழுக்கள் 2 ஆயிரத்து 888 பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த முகாம்கள் மூலம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 347 பயனாளிகள் பலன் அடைந்துள்ளார்கள். அவர்களில் 2 ஆயிரத்து 663 பேருக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
9 ஆயிரத்து 840 பேருக்கு காய்ச்சலுடன் இருமல், சளி ஆகியவற்றுக்கும் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டன. எவரும் மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை. மக்கள் தேவையில்லாமல் பதற்றம் அடைய அவசியமில்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.