என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முற்போக்கு அரசியலை திரைப்படங்கள் சொல்ல வேண்டும்!- திருமாவளவன்
- திரைத்துறை வாயிலாக முற்போக்கு அரசியலை மக்களுக்கு சொல்ல வேண்டும்.
- ஒவ்வொருவருக்கும் வீடு இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
புதுவேதம் பட பாடல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
திரைத்துறை வாயிலாக முற்போக்கு அரசியலை மக்களுக்கு சொல்ல வேண்டும். இந்தியாவில் வீடு இல்லாமல் பலகோடி பேர் இருக்கிறார்கள். இந்தியாவை வல்லரசாக்க போராடிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் வீடு இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
லட்சக்கணக்கான மக்கள் பிளாட் பாரங்களில் வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டும். எல்லோரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பது தான் இடதுசாரி சிந்தனை. அந்த அரசியல் வலுப்பெற வேண்டும் என்றார்.
Next Story






