search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போர் தீவிரம் அடைவதால் ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது: தமிழக அரசு வேண்டுகோள்
    X

    போர் தீவிரம் அடைவதால் ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது: தமிழக அரசு வேண்டுகோள்

    • காசா-இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்து வருவதால் பல இடங்களில் ஏவுகணை வீசப்பட்டு வருகிறது.
    • ஜெருசலேம் நகருக்கு கிறிஸ்தவர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருபவர்களை அந்நாட்டு அரசு கவனத்துடன் பாதுகாத்து வருகிறது.

    சென்னை:

    ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    காசா-இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்து வருவதால் பல இடங்களில் ஏவுகணை வீசப்பட்டு வருகிறது. இதில் பலர் கொல்லப்படுகின்றனர்.

    இந்த சூழலில் இஸ்ரேல் பகுதியில் உள்ள ஜெருசலேம் நகருக்கு கிறிஸ்தவர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருபவர்களை அந்நாட்டு அரசு கவனத்துடன் பாதுகாத்து வருகிறது.

    இந்த சமயத்தில் தமிழகத்தில் இருந்தும் 10-க்கும் மேற்பட்டோர் ஜெருசலேம் சென்று உள்ளனர். அவர்கள் அங்கு பாதுகாப்பாக இருக்கும் நிலையில் போர் பதற்றம் உள்ளதால் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கூடியவர்கள் அந்த பயணத்தை தவிர்ப்பது நல்லது என்று தமிழக அரசு அதிகாரிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    Next Story
    ×