என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழக அரசு
நீட் 'ரிட்' மனுவை தமிழக அரசு வாபஸ் பெற்றது
- நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப் பெற தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
- ரிட் மனு எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது, கடந்த ஆட்சியில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது என தமிழ்நாடு அரசின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
சென்னை:
நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப் பெற தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த ரிட் மனு எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது, கடந்த ஆட்சியில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது என தமிழ்நாடு அரசின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான ரிட் மனுவை திரும்ப பெற தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளித்தது.
நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டம் கூட்டாட்சி அமைப்புக்கு எதிராக உள்ளதால், சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






