என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மெரினாவில் போக்குவரத்து மாற்றம்- 'கூகுள் மேப்' மூலம் மாற்று பாதைகளை கண்டறிய போலீசார் ஏற்பாடு
- சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த காணும் பொங்கலுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் கூகுள் வரைபடத்தில் RoadEase ஆப் மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும்.
- வாகன ஓட்டிகள் தங்களது கூகுள் மேப் மூலம் மாற்று பாதைகளை கண்காணித்து அவர்கள் செல்லக்கூடிய இலக்கை சென்றடையும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:
காணும் பொங்கலையொட்டி மெரினாவில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-
மெரினாவில் காணும் பொங்கல் அன்று காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில், மக்கள் கூட்டம் மிக அதிகமாக கூடும் போது. வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை-முத்துசாமி பாயின்ட்-வாலாஜா பாயின்ட்-அண்ணாசாலை பெரியார் சிலை-அண்ணா சிலை-வெல்லிங்டன் பாயின்ட்-ஸ்பென்சர் சந்திப்பு-பட்டுளாஸ் சாலை-மணிக்கூண்டு-ஜி.ஆர்.எச். பாயின்ட் வழியாக டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை சென்று, தங்களது இலக்கினை அடையலாம்.
அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில், திருப்பப்பட்டு பாரதி சாலை. பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கினை அடையலாம்.
மேலும் பாரதி சாலையானது கண்ணகி சிலையில் இருந்து ஒருவழிப் பாதையாகவும், வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோட்டுக்கு வாகனங்கள் செல்ல தடை செய்தும் பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் செய்யப்பட்டுள்ளது. (பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்).
பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்தும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விக்டோரியா விடுதி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்).
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த காணும் பொங்கலுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் கூகுள் வரைபடத்தில் RoadEase ஆப் மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்களது கூகுள் மேப் மூலம் மாற்று பாதைகளை கண்காணித்து அவர்கள் செல்லக்கூடிய இலக்கை சென்றடையும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்