என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னையில் கழிவுநீர் லாரிகள் வேலைநிறுத்தம் 3-வது நாளாக நீடிப்பு
- லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் கழிவுநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
வீடு மற்றும் வணிக நிறுவனங்கள், 14420 என்ற எண்ணை பயன்படுத்தி கழிவுநீரை லாரி மூலம் வெளியேற்றும் திட்டத்தையும் குடிநீர் வாரியம் செயல்படுத்த திட்டமிட்டது. இனி இந்த எண் மூலம் வரும் அழைப்புகளின் படி மட்டுமே கழிவு நீர் அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தனியார் லாரிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 3-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடிக்கிறது. இதனால் சென்னை பெருங்குடி, நெசப்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கழிவு நீர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பக்கம் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் கழிவுநீரை அகற்ற லாரிகளையே நம்பி இருக்கிறார்கள்.
இங்கிருந்து அகற்றப்படும் கழிவுநீர் 1000-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பெருங்குடி மற்று சோழிங்கநல்லூர் பகுதிகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் கழிவுநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.