search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- டி.டி.வி.தினகரன் நாளை ஆலோசனை
    X

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- டி.டி.வி.தினகரன் நாளை ஆலோசனை

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
    • அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் போட்டியிட ஒவ்வொரு கட்சியும் ஆர்வம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சி ஏற்கனவே நடந்த தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அ.ம.மு.க. கட்சிக்கு 1,204 வாக்குகள் கிடைத்தன.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடுமா? என்பது தொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி செந்தமிழனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? என்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×