search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூடுதல் தண்ணீர் திறப்பால் சரிந்து வரும் முல்லை பெரியாறு, வைகை அணை நீர்மட்டம்
    X

    கூடுதல் தண்ணீர் திறப்பால் சரிந்து வரும் முல்லை பெரியாறு, வைகை அணை நீர்மட்டம்

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.80 அடியாக உள்ளது. 34 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.85 அடியாக உள்ளது. 8 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றது. 152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு கேரள அரசு பல்வேறு முட்டுக்கட்டை போட்டுவந்தபோதும் பருவமழை காலங்களின் போது 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு அணையின் பலம் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு 89 கனஅடிநீர் மட்டுமே வருகிறது. ஆனால் தமிழக பகுதிக்கு 1867 கனஅடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நீர்மட்டம் 139.40 அடியாக சரிந்துள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 69 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கப்பட்ட நிலையில் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மழை நின்றபோதும் தண்ணீர்திறப்பு அதிகரிக்கப்பட்டதால் தற்போது அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து 52.56 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 667 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2669 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.80 அடியாக உள்ளது. 34 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.85 அடியாக உள்ளது. 8 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    Next Story
    ×