search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Jayalalithaa
    X

    ஜெயலலிதாவின் சொத்து யாருக்கு? - மீண்டும் சூடுபிடிக்கும் வழக்கு

    • ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் கர்நாடக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டனர்.
    • சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி இப்போது கர்நாடக மாநில சட்டத்துறைக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5.12.2016 அன்று மரணம் அடைந்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு அவரது நகை மற்றும் சொத்துக்களுக்கான வழக்கு சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு நடந்த போது அவரது போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்திய போது ஏராளமான பொருட்களை கைப்பற்றியதோடு வங்கிகளில் உள்ள பணம் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன.

    அந்த வகையில் பறிமுதல் செய்யப்பட்ட 6 டிரங்பெட்டி நகைகள், 1562 ஏக்கர் நிலம், பல கோடி ரூபாய் வங்கிப் பணம் ஆகியவை கர்நாடக கோர்ட்டு கட்டுப்பாட்டில் இருக்கிறது.

    சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே இறந்து போனார். இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு தண்டனை உறுதியானதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு ஜெயிலில் தண்டனை அனுபவித்து விடுதலையானார்கள்.

    இந்த நிலையில் கோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள நகை மற்றும் சொத்துக்களை ஏலம் விட சொல்லி பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் வழக்கு போட்டார்.

    இதையடுத்து வழக்கறிஞர் கிரண்ஜவாரி என்பவரை கோர்ட்டு நியமித்து ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.

    மேலும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கவும் ஏலம் விட்டு வழக்குக்காக கர்நாடக அரசு செலவிட்ட ரூ.5 கோடியை தமிழக அரசு திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.


    இதையறிந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் கர்நாடக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டனர். அதில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் நாங்கள் தான். எனவே நகை உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    இந்த நிலையில் தான் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி இப்போது கர்நாடக மாநில சட்டத்துறைக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் இன்னும் மதிப்பு குறையாமல் அப்படியே இருக்கும் நகைகள், சொத்து, பணம் ஆகியவற்றை உடனடியாக ஏலம் விட வேண்டும். இதன் மூலம் தமிழக அரசுக்கு ஏராளமான பணம் கிடைக்கும் அதன் மூலம் ஏழைகளின் நல்வாழ்விற்கு செலவிட முடியும்.

    இந்த வழக்கில் தீபா, தீபக்குக்கு எந்த ரோலும் கிடையாது. அவர்களின் மனு தள்ளுபடியாகி விட்டது. இதை ஐகோர்ட்டில் விளக்கிடும் வகையில் அதற்கு ஏதுவான மனுவை கிரண்ஜவாரி தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மீண்டும் வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    Next Story
    ×