search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம் நடைபெறுமா?
    X

    திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம் நடைபெறுமா?

    • கோவில் திருவிழாவின் கொடியேற்று விழாவை தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்
    • மரக்காணத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தர்மாபுரி வீதியில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாத பஞ்சமி திதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா, 22 நாட்களுக்கு மகாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்துடன் நடைபெறுவது வழக்கம். இந்த விழா கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் சார்பாக நடைபெற்று வருகிறது.

    இக்கோவிலை இந்து அறநிலையதுறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டுமென ஒரு சிலர் கடந்த 2 ஆண்டுக்கு முன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் மரக்காணம் திரவுபதி அம்மன் கோவிலை இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. இருந்த போதும் கடந்த ஆண்டு வழக்கம் போல 22 நாள் திருவிழா நடைபெற்றது.


    இந்த நிலையில் இந்த ஆண்டின் சித்திரை மாத பஞ்சமி திதி அன்று தேர்தல் நடைமுறை விதிகள் இருந்ததால் கொடியேற்று விழா நடைபெறவில்லை. இதனால் ஒரு மாதம் கழித்து இன்று வைகாசி மாத பஞ்சமி திதியில் கொடியேற்று விழா நடத்த பொதுமக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துனர்.

    இதற்கு இந்து அறநிலையத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கோவில் திருவிழாவின் கொடியேற்று விழாவை தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் மரக்காணத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு கொடியேற்று விழா இன்று நடைபெறுமா? அல்லது நிறுத்தப்படுமா என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    Next Story
    ×