search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் டாஸ்மாக் பார்களுக்கு இ-டெண்டர்
    X

    தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் டாஸ்மாக் பார்களுக்கு இ-டெண்டர்

    • பார்களில் தின்பண்டங்கள் விற்பதற்கும் காலி பாட்டில்களை சேகரித்து கொடுப்பதற்கும் டெண்டர் விடப்படும்.
    • சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பார்களுக்கு இன்று இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2000 கடைகளில்தான் பார்கள் இயங்கி வருகின்றன.

    மீதமுள்ள மதுக்கடைகளில் பார்கள் கிடையாது. விதிகளை மீறி அங்கு பார்கள் செயல்படுவதால் வருவாய் இழப்பு ஏற்படுகின்றன.

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பார்கள் இல்லாததால் மது பிரியர்கள் கடைகள் முன்பு ரோட்டில் நின்றபடி மது அருந்தும் நிலை நீடித்து வருகிறது.

    சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பார்கள் டெண்டர் விடப்படவில்லை. பார்களில் தின்பண்டங்கள் விற்பதற்கும் காலி பாட்டில்களை சேகரித்து கொடுப்பதற்கும் டெண்டர் விடப்படும். இதுவரையில் நேரடி டெண்டர் முறை இருந்து வந்தது.

    தற்போது இ-டெண்டர் முதன்முதலாக விடப்பட்டு உள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பார்களுக்கு இன்று இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    இந்த மாத இறுதியில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு பார்கள் நடத்த யார் அதிகபட்ச டெண்டர் குறிப்பிட்டு இருக்கிறார்களோ அவர் களுக்கு பார்கள் நடத்த அனுமதியளிக்கப்படும். நவம்பர் மாதத்தில் பார்கள் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்கள் செயல்படாததால் அரசுக்கு பலகோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    பார் உரிமையாளர்களும் நீண்ட நாட்களாக டெண்டர் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது டெண்டர் விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×