என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்தில் படித்துவிட்டு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 66 லட்சத்தை கடந்தது
- ஆண்கள் 31 லட்சத்து 7 ஆயிரத்து 600 பேர், பெண்கள் 35 லட்சத்து 77 ஆயிரத்து 671 பேர் மூன்றாம் பாலினத்தவர் 266 பேர்.
- வயது வாரியாகவும் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஏப்ரல் 30-ந்தேதி நிலவரப்படி, தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 66 லட்சத்து 85 ஆயிரத்து 537 ஆகும்.
இதில், ஆண்கள் 31 லட்சத்து 7 ஆயிரத்து 600 பேர், பெண்கள் 35 லட்சத்து 77 ஆயிரத்து 671 பேர் மூன்றாம் பாலினத்தவர் 266 பேர்.
வயது வாரியாகவும் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 17 லட்சத்து 65 ஆயிரத்து 888 பேர். 19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர் கள் 28 லட்சத்து 43 ஆயிரத்து 792 பேர் ஆவர்.
31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 32 ஆயிரத்து 990 பேர். 46 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 756 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 ஆயிரத்து 111 பேர் உள்ள னர். இந்நிலையில், பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.