என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நீர்வரத்து 1500 கன அடியாக சரிவு- ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- நீர்வரத்தானது தற்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு 2000 கனஅடியாக குறைந்தது.
- ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டும் தண்ணீர் ஆனது குறைவாகவே காணப்படுகிறது.
ஒகேனக்கல்:
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு மழை இல்லாததாலும் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரானது முற்றிலும் நிறுத்தப்பட்டாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்த நீர்வரத்தானது தற்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு 2000 கனஅடியாக குறைந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 1500 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்து சரிவு காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டும் தண்ணீர் ஆனது குறைவாகவே காணப்படுகிறது.
தொடர் விடுமுறை காரணமாக இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் எண்ணை மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், கடைவீதியிலும், மீன் மற்றும் இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.