என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னையில் 19 பெண் போலீசுக்கு வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல்- கமிஷனர் உத்தரவு
- 19 பெண் காவலர்கள் அவர்களது விருப்பப்படி சென்னை பெருநகர காவலில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பணிமாறுதல் ஆணையினை பெற்று சென்றுள்ளனர்.
- சென்னை போலீஸ் கமிஷனர் அருண், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின ஆணையினை செயல்படுத்தி உள்ளார்.
சென்னை:
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல் அதிகாரிகள் ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை முடிந்து, பணிக்கு திரும்பும் போது அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்கு வசதியாக, அவர்கள் மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பிய பிறகு அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சேர்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணி மாறுதல் வழங்கப்படும் என ஆணை பிறப்பித்துள்ளார்.
அவரது ஆணைக்கிணங்க அரசு உத்தரவினை நிறைவேற்றும் வகையில் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 19 பெண் காவலர்கள் அவர்களது விருப்பப்படி சென்னை பெருநகர காவலில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பணிமாறுதல் ஆணையினை பெற்று சென்றுள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அருண், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின ஆணையினை செயல்படுத்தி உள்ளார்.