என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அமைச்சர் காந்திக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்கள் கைது
- அமைச்சரின் உதவியாளர் ராஜசேகரன் (62) காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அமைச்சரை மிரட்டும் தொனியில் பேசிய 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
நெமிலி:
கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை சென்று விட்டு தனது காரில் ராணிப்பேட்டை நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர், தான் வக்கீல் என்றும், தன்னிடம் ராணிப்பேட்டையை சேர்ந்த ஒருவர் பணம் வாங்கியுள்ளார். அதை நீங்கள் தான் உடனடியாக வாங்கித்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் போனில் தொடர்புகொண்ட அந்த நபர், அமைச்சரை தொந்தரவு செய்யும் வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சரின் உதவியாளர் ராஜசேகரன் (62) காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தீவிரமாக விசாரித்த போலீசார், செல்போன் சிக்னலை வைத்து 2 வாலிபர்களை பிடித்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த கோகுல்(25), கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த பாலாஜி(31) என்றும் தெரிய வந்தது.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அமைச்சரை மிரட்டும் தொனியில் பேசிய 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.